Monday, May 9, 2016

17. பாசுர ராமாயணம்

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து சொற்றொடர்களைத் தொகுத்து
பெரியவாச்சான் பிள்ளை இயற்றியது.  

பாசுர ராமாயணம் 
பால காண்டம்
திரு மடந்தை, மண் மடந்தை இரு பாலும் திகழ,
நலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில்,
அந்தமில் பேரின்பத்து அடியரொடு,
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்,
அயர்வரும் அமரர்கள் அதிபதியான,
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்,
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்,
ஆவார் ஆர் துணை என்று துளங்கும்,
நல் அமரர் துயர் தீர,
வல்லரக்கர் வாழ் இலங்கை பாழ் படுக்க எண்ணி,
மண் உலகத்தோர் உய்ய,
அயோத்தி எனும் அணி நகரத்து,
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்,
கௌசலை தன் குல மதலையாய்,
தயரதன் தன் மகனாய்த் தோன்றி,
குணம் திகழ் கொண்டலாய்,
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து வந்து,
தனை எதிர்த்த தாடகை தன் உரம் கீண்டு,
வல்லரக்கர் உயிர் உண்டு
கல்லைப் பெண்ணாக்கி,
காரார் திண் சிலை இருத்து,
மைதிலியை மணம் புணர்ந்து,
இருபத்து ஒரு கால் அரசு களை கட்ட,
மழுவாளி வெவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு,
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி,
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க,

அயோத்யா காண்டம் 
கொங்கைவன்   கூனி சொல் கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட,
அக்கடிய சொல் கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
'குலக்குமரா காடுறையப்போ' என்று விடை கொடுப்ப,
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து,
மைவாய களிறொழிந்து மா ஒழிந்து தேரொழிந்து,
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரும் மென் நோக்கி  வைதேவியின் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல,
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
பக்தி உடைக் குகன்கடத்த கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்கு காயோடு நீடு கனி உண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல் அணைமேல் கண் துயின்று
சித்திர கூடத்து இருப்ப, தயரதன் தான்
'நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என் பெற்றாய் கைகேசி?
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்'
என்று வான் ஏற,
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து
ஆனை  புரவி தேரோடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரத நம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான்பணயம் வைத்துக் குவலயத்
துங்கக் கரியும்  பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய் தண்டகாரண்யம் புகுந்து

ஆரண்ய காண்டம்
மறை முனிவருக்கு 'அஞ்சேல்மின்!' என்று அருள் கொடுத்து
வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்து
வந்தமிழ் மாமு கொடுத்த வரிவில் வாங்கி
புலர்த்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேர் ஆவன் என்ன,
பொன்னிறம் கொண்ட சுடு சினத்த சூர்ப்பணகி
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா  விடுத்து,
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி,
அவள் கதறித்  தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப்புக,
கொடுமையின் கடுவிசை அரக்கன்
அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்
ஓருருவாய மானை அமைத்து
செங்கல் பொடிக்கூரை சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பில் தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல் சூழ் இலங்கையில்
அரக்குர் குலத்துக்கு நஞ்சாகக் கொண்டுபோய்
வம்பு உலாம் கடிகாவில் சிறையாய்  வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்  கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்தேற்றிக்
கங்குலும் பகலும் கண்துயில் இல்லா
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவாரி தந்த கனி உவந்து

கிஷ்கிந்தா காண்டம்
வனமருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மராமரம் ஏழ் எய்தி
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டிக்
கருத்துடைத்  தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக்கோனுடனிருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைகருமம் திருத்தி,
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூதுரைத்தல் செப்ப!

சுந்தரகாண்டம்
சீராரும் திறலனுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதில் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராருமுலை மடவாள் வைதேவி தனைக்கண்டு
'நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்!
அயோத்திதனில்  ஓர் இடவகையில்
எல்லியம் போதினிதிருத்தல்
மல்லிகைமாமலை கொண்டாங்கார்த்ததும்
கலக்கிய மாமனத்தினளாய்க் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மாமனத்தவனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப்போ என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடங்கேகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல்வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்,
சித்திரகூடத்திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்,
சிறுகாக்கை முலைதீண்டி மூவலகும் திரிந்தோடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம்
என்ன அத்திரமே அவன் கண்ணை  அறுத்ததுவும்
பொன்னொத்த மானொன்று புகிந்தினிது விளையாட
நின்னன்பின் வழி நின்று  சிலைபிடித்தேம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்
ஈதவன் கை மோதிரமே என்றடையாளம் தெரிந்துரைக்க
மலர்க்குழலாள் சீதையும்
வில்லிறுத்தான்  மோதிரம்  கண்டு
அனுமன் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்துகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர்கோன் மாக்கடிகாவையிறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து மீண்டு
அன்பினால் அயோத்தியர்கோன்
தளிர்புரையும் அடியிணை பணிய

யுத்தகாண்டம்
கானஎண்கும் குரங்கும் முசுவும்
படையாக்  கொடியோன் இலங்கை புகலுற்று
அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வ விபீடணர்க்கு நல்லனாய்
விரிநீர் இலங்கை அருளி,
சரண்புக்க குரை கடலை அடலம்பால் மறுக எய்து
கொல்லைவிலங்கு பணிசெய்ய
மலையால் அணைகட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடியாக,
சிலைமலி செஞ்சரங்கள் செல உய்த்துக்
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரமாட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போயுதிர,
சிலைவளைத்து சரமழை பொழிந்து
கரந்துணித்து வென்றி கொண்ட செருக்களத்துக்
கடிக்கமல நான்முகனும், கண்மூன்றத்தானும்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து
மணிமுடி பணிதர அடி இணை வணங்க
கோலத்திருமாமகளொடு
செல்வவீ டணன்  வானரக்கோனுடன்
இலகுமணி நெடுந்தேர் ஏறி, சீரணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி எய்தி,
நன்னீராடிப் பொங்கிளவாடை யரையில் சாத்தித்
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையா
முதலா மேதகு பல்கலணிந்து
சூட்டு நன்மாலைகளணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவும் நண்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.     

ஸ்ரீராமஜெயம் 
 

   

         
 
      



Thursday, April 30, 2015

16. வைஷ்ணவ ஜனதோ

'வைஷ்ணவ ஜனதோ' என்ற பஜனை கீதம் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங்  மேத்தா என்ற குஜராத்திக் கவிஞரால் இயற்றப்பட்டது.

மகாத்மா காந்திக்கு இது மிகவும் பிடித்த பாடல் என்பது அனைவரும் அநேகமாக அறிந்திருக்கக் கூடிய ஒரு விஷயம்.

முன்பெல்லாம் அகில இந்திய வானொலியில் வெள்ளிக்கிழமை காலையில் ஓலி பரப்பப்பட்டு வந்த 'காந்தி ஜயந்தி' நிகழ்ச்சி இந்தப் பாடலுடன் தான் துவங்கும்.

இந்தப் பாடல் பிரபலமாக இருந்தாலும், இதன் பொருள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன் Readers' Digest பத்திரிகையில் இந்தப் பாடலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளி வந்தது. அதன் அடிப்படையில், இந்தப் பாடலைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். மொழி பெயர்த்த பிறகு,  Wikipedia இணையதளப் பக்கத்திலும் ஆங்கில மொழி பெயர்ப்பு இருந்ததைப் பார்த்தேன். அந்த மொழி பெயர்ப்பையும் கருத்தில் கொண்டு, சில மாறுதல்கள் செய்திருக்கிறேன். இது மொழிபெயர்ப்புக் கவிதை என்பதால் மரபுக் கவிதை போல் இருக்காது. (தமிழில் எழுதப்படும் பல கவிதைகள் தமிழ்க் கவிதை மரபுகளைப் பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம்!)

வைஷ்ணவ ஜனதோ (வைணவப் பெருமக்கள்)

வைணவர் என்பவர் யார்?
இன்னொருவர் வலியை உணர்பவர் பார்!
மற்றவர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்பவர்
என்றும் தான் எனும் அகந்தை சற்றும் கொள்ளாதவர்!

வைணவர் மதிப்பார் உலகில் உள்ளோர் அனைவரையும்
எவர் குறித்தும் கூறார் தீய சொல் எதுவும்
எண்ணம், சொல், செயல் மூன்றிலும் உறுதியானவர்
புண்ணியம் செய்தவள் அவரைப் பெற்ற தாய்

எல்லோரும் சமம் வைணவருக்கு, பேராசை அண்டாது அவரை.
பெண்களைத் தன் தாய்போல் மதிப்பவர் அவர்
பொய்யின் சுவையை அறியாது அவர் நாக்கு அவர் இறுதி மூச்சு வரை
நாட்டம் இல்லை அவருக்குப் பிறர் ஈட்டிய செல்வத்தில்.

சிறிதும் பற்றில்லை அவருக்கு இவ்வுலகப் பொருட்களின் மீது
துறவைத்தான் நாடும் அவர் மனம்
இறைவனின் திருநாமமே என்றும் ஈர்க்கும் அவரை
அவருள்ளே அடங்கும் அத்தனை திருத்தலங்களும்!

வஞ்சனையும் பேராசையும் விலகி நிற்கும் அவரிடமிருந்து
காமத்தையும் கோபத்தையும் விரட்டி அடித்தவர் அவர்
தம் தலைமுறைகள் அனைத்தையும்  தூக்கி நிறுத்தும் அவர் நற்பண்புகள்
அத்தகைய சான்றோரைச் சந்திக்க விழைகிறது என் மனம்

இந்த வலைப்பதிவு தென்னிந்திய, குறிப்பாக ராமானுஜர்  வழி வைணவத்தைப் பற்றித்தான் என்றாலும், இந்த குஜராத்திக் கவிதை வைணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருப்பதால் இதை இங்கே சேர்த்திருக்கிறேன்.

வை(ஷ்)ணவர் என்றால் விஷ்ணுவை வணங்குபவர் என்று பொருள். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். (எல்லோருக்கும்) உள்ளே புகுந்திருப்பவர் என்றும் பொருள். நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளேயும் இருப்பவர் என்ற பொருளைக் குறிக்கும் 'கடவுள்' என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகரான சொல் விஷ்ணு. விஷ்ணுவை வணங்குபவர்கள் அகத் தூய்மையுடனும், அனைவரையும் தன்னைப்போல் கருதுபவராகவும் இருக்க வேண்டும் என்ற இந்தப் பாடலின் கருத்து வைணவத்துக்கு ஒரு நல்ல விளக்கமாக அமைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நாம் அனைவருமே வைணவப் பெருமக்களாக   இருக்க முயல வேண்டும்.

இந்தப் பாடலைப் பல வட இந்திய,, தென்னிந்திய இசைக் கலைஞர்கள் பாடியிருக்கிறார்கள்.M.S. சுப்புலக்ஷ்மி அவர்கள் குரலில் இந்தப் பாடலைக் கீழே இருக்கும் Youtube வலைப்பக்கத்தில் கேட்டு மகிழுங்கள்.




Sunday, September 21, 2014

15. நாலாயிர திவ்ய ப்ரபந்தம்


ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்கள் திவ்ய ப்ரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு கால கட்டத்தில் இந்தப் பாசுரங்கள் மறைந்து போய் விட்டன. இவற்றை நமக்கு மீட்டுக்கொடுத்தவர் நாதமுனிகள் என்னும் ஆச்சாரியார்

காட்டுமன்னார்கோவிலில் அவதரித்திருந்த நாதமுனிகள், தம் ஊரில் இருந்த வீரநாராயணப் பெருமாள் கோயிலில் பெருமாளை வணங்கிக் கொண்டிருந்தபோது, திருநாரயணபுரத்திலிருந்து அந்தக் கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்கள் 'ஆராவமுதே அடியேன் உடலம்...' என்று துவங்கும் (நம்மாழ்வார் அருளிச் செய்த) திருவாய்மொழிப் பாசுரத்தைப் பாடினார்கள்.

பத்தாவது பாசுரத்தில் 'ஆயிரத்துள் இப்பத்தும்...' என்று வரும்.

நாதமுனிகள் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர். வேதங்கள் உணர்த்திய பொருளை இந்தப் பத்துப் பாடல்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உரைத்ததைக் கண்டு வியந்து, "ஆயிரத்தில் இப்பத்தும் என்று வருகிறதே? மீதமுள்ள பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா?" என்று பாடலைப் பாடியவர்களிடம் கேட்டார்.

அவர்கள் அந்தப் பத்துப் பாடல்கள்தான் தங்களுக்குத் தெரியும் என்றனர். அவர்களிடம் அந்தப் பத்துப் பாடல்களைக் கற்றுக்கொண்ட நாதமுனிகள், பாடலில் 'குருகூர் நம்பி' என்ற சொற்றொடர் வந்ததால், திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) விரைந்தார்.

அங்கே நெடுங்காலம் யோக நிஷ்டையில் இருந்த பராங்குச தாசர் என்னும்  மதுரகவி ஆழ்வாரின் சிடரை அணுகி ஆயிரம் பாடல்கள் பற்றிக் கேட்டார். அவரிடமும் அப்பாடல்கள் இல்லை. ஆனால் அவர் நம்மாழ்வார் மீது மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாடல்களை நாதமுனிகளுக்கு உபதேசித்து, அவற்றை 12,000 முறை பாராயணம் செய்பவர்களுக்கு நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பை 12,000 முறை பாராயணம் செய்தததும் அவர் முன்பு நம்மாழ்வார் தோன்றினார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் தனக்கு வழங்குமாறு நாதமுனிகள் வேண்ட, நம்மாழ்வார் தான் பாடிய பாடல்களோடு மற்ற ஆழ்வார்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து நாலாயிரம் பாடல்களை நாதமுனிகளுக்கு வழங்கினார்.

நாதமுனிகள் பாசுரங்களை நான்கு ஆயிரங்களாகப் பிரித்தார். சங்கீதம் தெரிந்தவராதலால் பாசுரங்களைப் பொருத்தமான ராகங்களில் பாடும் முறையையும் வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்த முறைதான் இன்று வரை பின்பற்றப்படுகிறது.

ஒவ்வோரு ஆயிரமும் அஷ்டாட்சர மந்திரத்தின் ஒவ்வொரு பகுதியாகக் கருதப் படுகிறது.

முதல் ஆயிரம்  'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும்,
இரண்டாவது ஆயிரம், 'நமோ' என்ற சொல்லையும்,
மூன்றாவது ஆயிரம், 'நாராயண' என்ற திருநாமத்தையும்,
நான்காவது ஆயிரம் 'ஆய' என்ற விகுதியையும் குறிக்கிறது என்பது ஐதீகம்.

'ப்ரபந்த சாரம்' என்ற தம்முடைய நூலில் மற்றொரு வைணவ ஆச்சாயரிரான வேதாந்த தேசிகர் 4,000 பாசுரங்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறார்.

1 பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 100
2 பேயாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 100
3 பூதத்தாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 100
4 திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம் 120
நான்முகன் திருவந்தாதி 96 216
5 நம்மாழ்வார் திருவிருத்தம் 100
திருவாசிரியம் 7
பெரிய திருவந்தாதி 87
திருவாய்மொழி 1102 1296
6 மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 11
7 குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 105
8 பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 473
9 ஆண்டாள் திருப்பாவை 30
நாச்சியார் திருமொழி 143 173
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 45
திருப்பள்ளி எழுச்சி 10 55
11 திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் 10
12 திருமங்கை ஆழ்வார் திருமொழி 1084
திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30
திருவெழுக்கூற்றிருக்கை 1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78 1253
13 திருவரங்கத்தமுதனார்  ராமானுச நூற்றந்தாதி 108
மொத்தம் 4000

ஆழ்வார்களின் பாசுரங்களுடன் திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த ராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்துத்தான் எண்ணிக்கை 4,000 வருகிறது.

 மேலும், மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பின் 11 பாடல்களும் நம்மாழ்வாரைப்பற்றித்தான். இதில் ஒரு பாடல் கூட பெருமாளைப் பற்றியது இல்லை.

இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, வைணவ சம்பிராயதத்தில்  நம்மாழ்வாருக்கும் ராமானுஜருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பான இடத்தை உணரலாம்.

நான்கு பகுதிகளிலும் அமைந்திருக்கும் பாசுரங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் ஆயிரம் தவிர மற்ற ஆயிரங்கள் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆயிரம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை.  இரண்டாவது பகுதி பெரிய திருமொழி என்றும், மூன்றாவது பகுதி திருவாய்மொழி என்றும், நான்காவது பகுதி இயற்பா என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே 'இரண்டாம் ஆயிரம்' போன்ற பெயர்கள் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

முதல் ஆயிரம் பெரியாழ்வர் திருமொழி 473
திருப்பாவை 30
நாச்சியார் திருமொழி 143
பெருமாள் திருமொழி 105
திருச்சந்த விருத்தம் 120
திருமாலை 45
திருப்பள்ளி எழுச்சி 10
அமலனாதிபிரான் 10
கண்ணி நுண் சிறுத்தாம்பு 11 947
பெரிய திருமொழி பெரிய திருமொழி 1084
(இரண்டாம் ஆயிரம்) திருக்குறுந்தாண்டகம் 20
திருநெடுந்தாண்டகம் 30 1134
திருவாய்மொழி திருவாய்மொழி 1102
(மூன்றாம் ஆயிரம்)
இயற்பா முதல் திருவந்தாதி 100
(நான்காம் ஆயிரம்) இரண்டாம் திருவந்தாதி 100
மூன்றாம் திருவந்தாதி 100
நான்முகன் திருவந்தாதி 96
திருவிருத்தம் 100
திருவாசிரியம் 7
பெரிய திருவந்தாதி 87
திருவெழுக்கூற்றிருக்கை 1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78
ராமானுச நூற்றந்தாதி 108 817
மொத்தம் 4000

Saturday, March 1, 2014

14. நில உலகில் பார்க்க முடியாத திருப்பதிகள்


நில உலகில் பார்க்க முடியாத திருப்பதிகள் 2

நில உலகில் அற வாழ்க்கை வாழ்ந்து திருமாலிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தியவர்கள் இவ்வுலக வாழ்க்கை முடிந்ததும் செல்லக்கூடிய இரு திருப்பதிகள் 108 திருப்பதிகளின் இறுதியில் இடம் பெறுகின்றன.

எண்: 107
திவ்யதேசப்பெயர்: 
திருப்பாற்கடல் (வ்யூஹம்)


பெருமாள்:  க்ஷீராப்திநாதன்
கிடந்த திருக்கோலம் (ஆதிசேஷ சயனம்)
தாயார்:  கடல் மகள் நாச்சியார், ஸ்ரீபூதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 5 250, 427, 439, 452, 471
ஆண்டாள் 3 475, 516, 551
குலசேகராழ்வார் 2 665, 680
திருமழிசையாழ்வார் 13 768, 769, 774, 779, 780, 832,
843, 846, 861, 2384, 2417
2456, 2460
தொண்டரடிப்பொடியாழ்வார் 1 889
திருமங்கையாழ்வார் 11 1003, 1006, 1019, 1341, 1347,
1398, 1618, 1744, 1828, 
2060, 2066
பொய்கையாழ்வார் 1 2106
பூதத்தாழ்வார் 2 2184, 2209
பேயாழ்வார் 4 2292, 2312, 2313, 2342
நம்மாழ்வார் 9 2556, 2618, 2661, 2835, 2844
2963, 3454, 3465, 3470
மொத்தம் 51
எண்: 108
திவ்யதேசப்பெயர்:  திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு, பரம்)
பெருமாள்:  பரமபதநாதன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  பெரிய பிராட்டியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 4 190, 277, 399, 472
ஆண்டாள் 1 482
திருமழிசையாழ்வார் 2 796, 2476
திருப்பாணாழ்வார் 1 927
திருமங்கையாழ்வார் 1 2042
பொய்கையாழ்வார் 2 2149, 2158
பேயாழ்வார் 1 2342
நம்மாழ்வார் 24 2543, 2545, 2552, 2652, 2867
3000, 3040, 3431, 3465, 3585,
3627, 3740, 3747, 3755-65
மொத்தம் 36

Friday, January 31, 2014

13. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்


பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் 18
எண்: 89
திவ்யதேசப் பெயர்:  திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)
ஊர்:  திருக்குறுங்குடி 
பெருமாள்:  நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, இருந்த நம்பி, வருக நம்பி, 
வைஷ்ணவ நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி
நின்ற திருக்கோலம்
தாயார்:  குறுங்குடிவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 1 71
திருமழிசையாழ்வார் 1 813
திருமங்கையாழ்வார் 25 1005, 1399, 1470, 1788-807,
2065, 2674
நம்மாழ்வார் 13 2782, 2986, 3161-71
மொத்தம் 40
எண்: 90
திவ்யதேசப்பெயர்:  திருச்சிரீவரமங்கை (திருச்சிரீவரமங்கல நகர், 
வானமாமலை, தோத்தாத்ரி க்ஷேத்ரம்)
ஊர்:  நாங்குனேரி
பெருமாள்:  தோத்தாத்ரிநாதன், வானமாமலை, தெய்வநாயகன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  சிரீவரமங்கைத்தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3183-93
எண்: 91
திவ்யதேசப்பெயர்:  திருவைகுண்டம்
(ஆழ்வார் நவத்திருப்பதிகளில் ஒன்று)
ஊர்:  ஸ்ரீவைகுண்டம்
பெருமாள்:  ஸ்ரீவைகுண்டநாதன், கள்ளப்பிரான்
நின்ற திருக்கோலம்
தாயார்:  வைகுந்தவல்லி, பூதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 2 3571, 3575
எண்: 92
திவ்யதேசப்பெயர்:  திருவரகுணமங்கை 
(ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று)
ஊர்:  வரகுணமங்கை 
பெருமாள்:  விஜயாசனப் பெருமாள்
இருந்த திருக்கோலம்
தாயார்:  வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 1 3571
எண்: 93
திவ்யதேசப்பெயர்:  திருப்புளிங்குடி (ஆழ்வார் நவதிருப்பதி)
ஊர்:  திருப்புளிங்குடி 
பெருமாள்:  காய்சினவேந்தன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளிங்குடிவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 12 3473, 3568-78
எண்: 94
திவ்யதேசப் பெயர்:  திருத்தொலைவில்லிமங்கலம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் 
இரண்டு - இரட்டைத் திருப்பதி)
ஊர்:  தொலைவில்லிமங்கலம்
முதல் கோவில்
பெருமாள்:  ஸ்ரீனிவாசன், தேவப்பிரான்
நின்ற திருக்கோலம்
தாயார்:  உபய நாச்சியார்கள்
இரண்டாவது கோவில்
பெருமாள்:  அரவிந்தலோசனன், செந்தாமரைக் கண்ணன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  கருந்தடங்கண்ணி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3271-81
எண்: 95
திவ்யதேசப்பெயர்:  திருக்குளந்தை (ஆழ்வார் நவதிருப்பதி)
ஊர்:  பெருங்குளம்
பெருமாள்:  ஸ்ரீனிவாசன், மாயக்கூத்தன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 1 3561
எண்: 96
திவ்யதேசப்பெயர்:  திருக்கோளூர் (ஆழ்வார் நவதிருப்பதி)
ஊர்:  திருக்கோளூர் 
பெருமாள்:  வைத்தமாநிதிப் பெருமாள், நிக்ஷேபவித்தன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  குமுதவல்லி, கோளூர்வல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 12 3293-3303, 3473
எண்: 97
திவ்யதேசப்பெயர்:  திருப்பேரை (தென் திருப்பேரை, திருப்பொறை 
ஆழ்வார் நவதிருப்பதி)
ஊர்:  திருப்பேரை 
பெருமாள்:  மகர நெடுங்குழைக்காதன், நிகரில் முகில்வண்ணன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3359-69
எண்: 98
திவ்யதேசப்பெயர்:  திருக்குருகூர் (ஆழ்வார் நவதிருப்பதி)
ஊர்:  ஆழ்வார் திருநகரி
பெருமாள்:  ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான்
இருந்த திருக்கோலம்
தாயார்:  ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3106-3116
எண்: 99
திவ்யதேசப்பெயர்:  திருவில்லிபுத்தூர்
ஊர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்
பெருமாள்:  வடபத்ரசாயி, ரங்கமன்னார்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  ஆண்டாள், கோதா நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 1 133
ஆண்டாள் 1 549
மொத்தம் 2
எண்: 100
திவ்யதேசப்பெயர்:  திருத்தண்கால்  (திருத்தண்காலூர்)
ஊர்:  திருத்தண்கால்
பெருமாள்:  நின்ற நாராயணன், திருத்த்ண்காலப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  செங்கமலத்தாயார், அன்னநாயகி, அனந்தநாயகி, 
அம்ருதநாயகி, ஜாம்பவதி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 4 1399, 2068, 2673, 2674
பூதத்தாழ்வார் 1 2251
மொத்தம் 5
எண்: 101
திவ்யதேசப்பெயர்:  திருக்கூடல்
ஊர்:  மதுரை
பெருமாள்:  கூடலழகர்
இருந்த திருக்கோலம்
தாயார்:  மதுரவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 1762
திருமழிசையாழ்வார் 1 2420
மொத்தம் 2
எண்: 102
திவ்யதேசப்பெயர்:  திருமாலிருஞ்சோலை, அழகர் கோவில்
ஊர்:  மதுரை
பெருமாள்:  அழகர், கள்ளழகர், மாலாங்காரர், மாலிருஞ்சோலை நம்பி
நின்ற திருக்கோலம்
தாயார்:  சுந்தரவல்லி, ஸ்ரீதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 34 71, 258, 338-59, 453-62
ஆண்டாள் 11 534, 587-96
திருமங்கையாழ்வார் 33 1022, 1114, 1329, 1573, 1634,
1760, 1765, 1818-37, 1855,
1969, 2020, 2034, 2673, 2674
பூதத்தாழ்வார் 3 2227, 2229, 2235
பேயாழ்வார் 1 2342
நம்மாழ்வார் 46 2886-918, 3733-44, 3749
மொத்தம் 128
எண்: 103
திவ்யதேசப்பெயர்:  திருமோகூர்
ஊர்:  திருமோகூர்
பெருமாள்:  காளமேகப் பெருமாள், திருமோகூர் ஆப்தன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  மோகூர்வல்லி, மோகனவல்லி, மேகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2673
நம்மாழ்வார் 11 3667-77
மொத்தம் 12
எண்: 104
திவ்யதேசப்பெயர்:  திருக்கோட்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
ஊர்:  திருக்கோஷ்டியூர்
பெருமாள்:  உரகமெல்லணையான், சௌம்ய நாராயணன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  திருமாமகள் நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 22 13-22, 173, 360-370
திருமங்கையாழ்வார் 13 1550, 1838-47, 1856, 2674
பூதத்தாழ்வார் 2 2227, 2268
பேயாழ்வார் 1 2343
திருமழிசையாழ்வார் 1 2415
மொத்தம் 39
எண்: 105
திவ்யதேசப்பெயர்:  திருப்புல்லாணி
ஊர்:  திருப்புல்லாணி
பெருமாள்:  கல்யாண ஜகந்நாதன்
நின்ற திருக்கோலம்
சக்ரவர்த்தித்திருமகன்
கிடந்த திருக்கோலம் (தர்ப்ப சயனம்)
தாயார்:  கல்யாணவல்லி, பத்மாசனி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 21 1768-87, 2674
எண்: 106
திவ்யதேசப்பெயர்:  திருமெய்யம்
ஊர்:  திருமயம்
பெருமாள்:  சத்யகிரிநாதன், சத்யமூர்த்தி, மெய்யப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  உய்யவந்த நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 9 1090, 1206, 1524, 1660, 1760,
1852, 2016, 2050, 2674