Sunday, February 4, 2018

57. திவ்யதேச தரிசன அனுபவம் - 36 திருப்புலியூர் (63)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
5. திருப்புலியூர் (63)

[ தலைவி தோழியர்க்கு அறத்தொடுநிற்றல்]
முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே
விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்
திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்
மருப்புலியூர் தென்றல் வரின் (63)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

பஞ்சபாண்டவர்களில், பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் இது. துரோணரைக் கொல்வதற்காக, அஸ்வத்தாமா என்ற யானையை முதலில் பீமன் கொல்ல, துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமா இறந்து விட்டதாக துரோணர் நினைக்கும் வகையில், யுதிஷ்டிரன் சம்ஸ்கிருத மொழியில் 'அஸ்வத்தாமா கத குஞ்சரஹ' என்று யானை என்ற வார்த்தை கடைசியில் வரும்படி சொன்னான். 'குஞ்சரஹ' என்ற வார்த்தையை துரோணர் காதில் விழாத அளவுக்கு யுதிஷ்டிரன் மெல்லச் சொன்னான் என்றும், 'குஞ்சரஹ' என்று யுதிஷ்டிரன் சொன்னபோது கிருஷ்ணர் தன் சங்கை ஊதி அந்த வார்த்தை துரோணர் காதில் விழாதபடி செய்து விட்டான் என்றும் இருவிதமாகச் சொல்லப்படுவதுண்டு. அதைக்கேட்டு துரோணர் தன் வில்லைக் கீழே போட்டு விட்ட நிலையில் திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றான். 

இந்த தர்மத்தை மீறிய செயலில் பீமனுக்கும் பங்கு உண்டு
என்பதால், அதற்குப் பிராயச்சித்தமாக (யுதிஷ்டிரன் திருச்செங்குன்றூர் கோவிலை புனர்நிர்மாணம் செய்தது போல்) பீமன் இந்தக் கோவிலைப்  புனர் நிர்மாணம் செய்தான் என்பது வரலாறு.

யுத்த தர்மத்துக்கு விரோதமாக  துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொன்ற  செயலுக்குப் பிராயச்சித்தம் தேடவே பீமன் இந்தக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இந்தக் கோவிலில் ஒரு பெரிய கதை நிறுவப்பட்டுள்ளது. இது பீமனின் கதை என்று நம்பப்படுகிறது.
  
ராமபிரானின் மூதாதையர்களின் ஒருவனான சிபிச் சக்கரவர்த்தி, தன்  நாட்டில்கடும்  பஞ்சம் நிலவியபோது, அதை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இங்கே தவம் செய்து கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு தானம் அளிக்க விரும்பினான்.  பஞ்சகாலத்தில் தானம் வாங்கக்கூடாது என்பதால் அவர்கள் அரசன் அளித்த தானத்தை வாங்க மறுத்து விட்டனர்.

அதனால் கோபமடைந்த சிபி அவர்கள் தவத்தைக் கலைக்க கிருத்யை என்னும் அரக்கியை அனுப்பினான். ரிஷிகள் விஷ்ணுவிடம் பிரார்த்திக்க, விஷ்ணுவின் கட்டளைப்படி, இந்திரன் புலி வடிவில் வனித்து அரக்கியை அழித்தான். பெருமாள் சப்தரிஷிகளுக்குக் காட்சி கொடுத்தார் . இந்திரன் புலி வடிவில் வந்து முனிவர்களின் தவத்தைக் காத்ததால் இந்த இடம் புலியூர் என்று பெயர் பெற்றது.

மூலவர் - மாயப்பிரான். நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் 
தாயார் - பொற்கொடி நாச்சியார் (தனிக்கோவில் இல்லை)

விமானம் - புருஷோத்தம விமானம் 

தீர்த்தம் - பிரக்ஞா சரஸ், பூஞ்சுனைத் தீர்த்தம்


இந்த திவ்ய தேசத்தின் பிரபாவம் பற்றி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் விளக்குவதைக் கேளுங்கள்.







இந்த திவ்ய தேசத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடலில் இந்த திவ்ய தேசத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)  (2672)
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
எட்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
1. கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா. (3759)

2. அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே. (3760)

3. புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே. (3761)

4. ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே. (3762)

5. புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே. (3763)

6. திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
அருளால் திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே. (3764)

7. மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. (3765)

8. மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே. (3766)

9. பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே. (3767)

10. அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே. (3768)

11. நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே. (3769)

ஓம் நமோ நாராயணாய!



No comments:

Post a Comment